ஃபனி புயல், அதிதீவிர புயலாக மாறி ஒடிசா நோக்கி நகர்கிறது: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபனி புயல் தற்போது அதி தீவிர புயலாக மாறி ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாளை மறுநாள் ஒடிசாவில் கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், அதி தீவிர புயலாக மாறிய ஃபனி புயல், சென்னையில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எனவும்,  இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் மணிக்கு 30 கிரோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். . மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நாளை மறுநாள் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக அவர் கூறினார். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்,  ஃபனி புயல் நாளை மறுநாள் ஒடிசாவின் பூரி அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது எனவும்,  மே 4-ம் தேதிக்குப் பிறகு கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறையும் எனவும் வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.

Related Posts