ஃபரூக் அப்துல்லா தொடர்பாக பொதுப்பாதுகாப்பு சட்ட அமைப்பிடம் முறையிடுமாறு வைகோவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தொடர்பாக பொதுப்பாதுகாப்பு சட்ட அமைப்பிடம் முறையிடுமாறு மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோவை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரை கண்டுபிடித்துத் தரக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வைகோவின் மனுவை தள்ளுபடி செய்தது. ஃபரூக் அப்துல்லா பொதுபாதுக்காப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால், அது தொடர்பான அமைப்பிடம் வைகோ முறையிடுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Posts