ஃபானி புயலில்  பலியான எண்ணிக்கை 64 ஆக உயர்வு: மத்திய குழுவினர் ஒடிசாவில்  இன்று ஆய்வு 

ஃபானி புயல் தாக்கிய ஒடிசாவில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக புரி பகுதியில் 39 பேர் ஃபானி புயலுக்கு பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே, புயல் பாதிப்பை ஆய்வு செய்வதற்காக 9 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஒடிசா விரைந்துள்ளனர். இன்று மற்றும் நாளை அவர்கள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். புயல் தாக்கி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், நிலைமை இன்னும் சீரடையவில்லை.

Related Posts