அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 6 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 6 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தடை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது சுதந்திர தின உரையில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தார். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்குள் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக பிளாஸ்டிக் பை, கப், பிளேட்டுகள், சிறிய பாட்டில்கள், ஸ்ட்ராக்கள், சில சிறிய பிளாஸ்டிக் சாஷேக்ககள் ஆகிய 6 பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இணைய வர்த்தக நிறுவனங்கள் பேக்கேஜிங்கிற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முன்னரே, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளன.

Related Posts