அக்னி நட்சத்திரம் வெயில் மே 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை  26 நாட்கள் நீடிக்கும்

சூரியன் நில நடுக்கோடான பூமத்திய ரேகையில் சஞ்சரிக்கும்போது  வெப்பம் மிகுந்த காலமாக உணர்கிறோம்.

இந்த கால கட்டத்தை ‘அக்னி நட்சத்திரம்’ அல்லது ‘கத்திரி வெயில்’ என்று அழைக்கபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த ஆண்டு மே 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை மொத்தம் 26 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலம் நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 21-வது நாளில் உச்சத்தை தொடும் வெயில்,  அதன்பிறகு படிப்படியாக குறையத் தொடங்கும். கடந்த 2018-ம் ஆண்டு அக்னி நட்சத்திர காலத் தொடக்கத்தில்வெயில் 100 டிகிரியில் தொடங்கி 108 டிகிரி வரை சென்றது. திருத்தணி, வேலூர், கரூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டை பொறுத்த வரையில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வரைபதிவாகியுள்ளது.  தற்போது குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஊட்டி போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இந்த மழை நீடிப்பதால்  வெப்பம் சற்று தணிந்துள்ளது. ஆனாலும் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாகவே இருக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts