அசோக் லேலண்ட் தொழிலார்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு

சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவன தொழிலார்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறை தற்போது பெரும் சரிவை சந்தித்துள்ளது. பல்வேறு வாகன தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நிறுவனங்களை மூடி வருகின்றனர். சென்னை எண்ணூரில் கனரக வாகன உற்பத்தி செய்யும் அசோக் லேலண்ட்  நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. இங்கு, ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆட்டோமொபைல் துறை மந்த நிலையால், அசோக் லேலண்ட் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு கடந்த 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 5 நாட்கள் கட்டாய விடுப்பு அளித்தது. அத்துடன் அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தியது. தற்போது எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவன தொழிலார்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. வரும் 14, 16, 19, 20, 21, 23, 24, ஆகிய 7 நாட்கள் கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டாய விடுப்பு அறிவித்த 5 நாட்களுக்கு ஊதியம் வழங்குவது பற்றி தொழிற்சங்கத்துடன் பேசி முடிவெடுக்கப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.

Related Posts