அடக்குமுறையை கண்டித்து ஓலா நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ஓட்டுநர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து, கோவையில், ஓலா நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில், ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஓலா நிறுவன அலுவலகத்தை ஓட்டுநர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, சில நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வலியுறுத்துவதாகவும், சில நேரங்களில் குறைவான கட்டணத்தை வசூலிக்குமாறு கூறுவதாகவும் ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தனர். கூடுதல் நபர்களை ஏற்றிச் செல்லுமாறு அறிவுறுத்துவதாகவும் தெரிவித்த ஓட்டுநர்கள், நிறுவனத்தின் சில விதிமுறைகளை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். பலமுறை கூறியும், தங்களின் கோரிக்கைகளுக்கு நிறுவனம் செவி சாய்க்கவில்லை என தெரிவித்த ஓட்டுநர்கள், பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Posts