அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், கண்டன முழக்கங்களை எழுப்பினர். அடிப்படை வசதிகள் செய்து தருமாறும், கல்வி ஊக்கத் தொகை வழங்குமாறும் நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியே வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

Related Posts