அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு தெண்டுல்கர்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீர்ர் தெண்டுல்கர்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு தெண்டுல்கர், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வார்னே உள்பட முன்னாள் வீரர்கள் பலர் சுட்டுரை மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தெண்டுல்கர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றியுடன் கூடிய அருமையான தொடக்கத்தை கொடுத்து 2003-ம் ஆண்டில் அடிலெய்டு டெஸ்டில் பெற்ற வெற்றியை இந்திய அணியினர் நினைவுப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார். இந்திய அணியினருக்கு  பாராட்டு தெரிவித்துள்ள அவர்,  இந்திய அணியினர் இந்த உற்சாகத்தையும், அழுத்தத்தையும் ஒரு போதும் விட்டுவிடக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். இரு இன்னிங்சிலும் முக்கியமான கட்டத்தில் புஜாராவின் பேட்டிங் அருமையாக இருந்தது எனவும், 4 பந்து வீச்சாளர்களும் தங்களது பணியை அர்ப்பணிப்புடன் செய்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts