அடுத்ததாக இஸ்ரேல் செல்ல முதலமைச்சர் திட்டம்

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றி ஆராய இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பபழனிசாமி அதிகாலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், துரைகண்ணு ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டு பயணம் வெற்றியாக முடிந்தது என்றார். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றி ஆராய இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Posts