அடுத்து புதிய முதல் அமைச்சர் நாளை தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்

கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நல குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை c வெளியாகியுள்ளது.

கோவா முதல்-அமைச்சர் மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்ப்பட்டதை அடுத்து கோவா மருத்துவமனையிலும், அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்களும்  சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நேற்று மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனிப்பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அவரது உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை. இதற்கிடையே கோவா மாநிலத்தில் ஆளும் பா.ஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் பனாஜியில் செய்தியாளர்களிடம் கூறுகையில் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை எனவும், எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த அமைச்சரிடம் வழங்க வேண்டும் என்றும் கூறினார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுதிக்கப்படும் முன் மனோகர் பாரிக்கர் பனாஜியில் இருந்து பாஜக தலைவர் அமித்ஷாவுடன் தொலைப் பேசி மூலம் பேசினார். அப்போது முதல்அமைச்சர் பொறுப்புகளை மூத்த அமைச்சருக்கு வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாளை பனாஜியில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் புதிய முதல்அமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. புதிய முதல் அமைச்சர் பதவிக்கு சபாநாயகர் பிரமோத் சவந்த், துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ, பொதுப் பணித் துறை அமைச்சர் சுதின் தவாலிகர் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. கோவாவில் தற்போதுள்ள நிலையில் காங்கிரஸ் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சிக்காது என்று மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Related Posts