அடுத்த இரு தினங்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்

அடுத்த இரு தினங்களில், வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக  கடந்த 24 மணி நேரத்தில்  தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளதாகவும், அதிகபட்சமாக தஞ்சாவூரில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த இரு தினங்களில் பொறுத்தவரை வட தமிழகத்தில் அனேக இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இடைவெளி விட்டு சில முறை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த மூன்று தினங்களுக்கும் மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் ஆந்திர கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று  அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Related Posts