அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்: பிரதமர் மோடி பொருளாதார நிலை குறித்து ஆலோசனை

பொருளாதாரக் கொள்கை குறித்த கலந்துரையாடல் அமர்வுக்கு நீதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பொருளாதார மற்றும் தொழில் நிபுணர்களுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு, வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை, ஏற்றுமதி, கல்வி மற்றும் சுகாதாரம் என 5 வேறுபட்ட பிரிவில் நிபுணர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி 2-வது முறையாக அமைந்ததை யடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை ஜூலை 5-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நிதிநிலை அறிக்கை அச்சிடப்படத் தொடங்குவதைக் குறிக்கும் அல்வா கிண்டும் நிகழ்வு நிதியமைச்சக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். பின்னர் பட்ஜெட் அச்சிடும் பணிக்கு பொறுப்பான அதிகாரிகள், ஊழியர்களுக்கு  அல்வா விநியோகிக்கப்பட்டது

Related Posts