அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கும் நிகழ்ச்சிகளில் வைகோ பங்கேற்பு

அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கும் நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ பங்கேற்க உள்ளார் என  மதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி அடுத்த மாதம் 4-ந் தேதி மாலை 4 மணிக்கு கலிங்கபட்டியில் கிராம மக்கள் சார்பாக வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 5-ந் தேதி மாலை 4 மணிக்கு, சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களை திருநெல்வேலி மாவட்டத்தில் நீடிக்க வலியுறுத்தி, சங்கரன்கோவிலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வைகோ பங்கேற்கிறார். 7-ந் தேதி மாலை 6.00 மணிக்கு நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், காவல் கோட்டம், வேள்பாரி நூல்களின் படைப்பாளர் சு.வெங்கடேசனுக்கு ‘இயற்றமிழ் வித்தகர்’ விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கிறார். இந்த விழா சென்னை எழும்பூர் சிராஜ் மகால் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சென்னையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டுப் பணிகளை வைகோ பார்வையிடுவார் என மதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Related Posts