அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

இது குறித்த வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,  வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாளுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 2 நாளுக்கு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தேனி,கோவை, திண்டுக்கல், நெல்லை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை அடுத்த2 நாட்களுக்கு  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறைந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், வேடசந்தூரில் 7 சென்டிமீட்டரும், , தேவாலாவில் 4 சென்டி மீட்டரும், பெரியாறு,நடுவட்டம் பகுதிகளில் 2 சென்டிமீட்டரும்  மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts