அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை,  தேனி,  திண்டுக்கல்,  திருப்பூர்,  நீலகிரி,  கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனத்த மழை பெயக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் இன்று காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து திண்டுக்கல்லை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுவதாகவும், இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர்,நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய்க்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.. இந்த பகுதிகளில் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும்,. தற்போதைய நிலவரப்படி தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் வரும் 18 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் எனவும் அவர் கூறினார்,, மீனவர்கள் இன்று மதியம் முதல் கடலுக்குச் செல்லலாம் எனவும் வரும் 18 ஆம் தேதி தெற்கு வங்கக் கடல் மத்திய பகுதியிலும், 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 22 சென்டி மீட்டத் மழை பதிவாகியுள்ளது எனவும் ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 29 சென்டி மீட்டராக இருக்கும் எனவும் தெரிவித்தார்.. புயலானது இன்னும் 3 மணி நேரத்திற்குள் கேரள மாநிலம் நோக்கி பயணித்து பின் 24 மணி நேரத்திகுள் அரபிக் கடலை சென்றடையும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

Related Posts