அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்புவியரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கில் நிலவும் காற்றின் சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில்பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

என தெரிவித்தார்.  குறிப்பாக வேலூர் , திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ,சேலம் நாகை, புதுக்கோட்டை மற்றும்  அரியலூர் மாவட்டங்களில் ஒரு சிலஇடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

Related Posts