அணியில் தோனி இருக்க தான் ஒரு முதலுதவி பெட்டி போலத்தான் இருப்பேன:  தினேஷ் கார்த்திக் 

உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரிஷப் பந்த், அம்பதி ராயுடு ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பது எப்போதுமே மகிழ்ச்சியான தருணம் எனவும்,  கடந்த 2017-ம் ஆண்டு இந்திய அணிக்கு திரும்பியதில் இருந்தே, உலகக்கோப்பைக்கான தன்னுடைய பயணம் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.  தோனி அணியில் இருக்க, தான் ஒரு முதலுதவி சிகிச்சை பெட்டி போல்தான் அணியுடன் பயணம் செய்வேன் எனவும், டோனி காயம் அடைந்தால், அன்றைய தினம் காயத்திற்கான கட்டாக  இருப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.  ஆனால் தன்னால் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய முடியும் எனவும், அல்லது பினிஷராக செயல்பட முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Posts