அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்றார் எம்.கே.சூரப்பா

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா இன்று பதவியேற்றார். 

சென்னை, ஏப்ரல்-12

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ராஜாராம். இவரது பணி காலம் கடந்த 2016, மே 26-ல் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து அந்த பதவிக்கு 2 வருடங்களாக துணைவேந்தர் யாரும் நியமிக்கப்படாத நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் துணைவேந்தர் நியமிக்கப்பட்டார். கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை துணைவேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். இவர் ஏற்கனவே பெங்களூரு ஐ.ஐ.டி. இயக்குனராக ஆறு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். மேலும் இந்திய அறிவியல் மையத்தில் 24 ஆண்டுகள் பேராசியராகவும் பணியாற்றி உள்ளார்.

காவிரி விவகாரத்தில் தமிழகமே போராடும் வேளையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை ஆளுநர் நியமித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.கே.சூரப்பா இன்று பதவியேற்றார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Related Posts