அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஏப்ரல்-06

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமது அதிகாரத்துக்கு உட்பட்டு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை நியமித்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் கருப்பு, வெள்ளை, சிகப்பு ஆகிய வண்ணங்கள் தான் எப்போது ஆட்சி செய்யும் என்றும் காவிக்கு எப்போது இங்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், ஐபிஎல் போட்டிகளை தமிழர்களின் உணர்வுகளை புரிந்து நடத்துவதா? வேண்டாமா? என்று அதன் நிர்வாகமே முடிவு செய்துகொள்ளும் என்று தெரிவித்தார்.

Related Posts