அண்ணா பல்கலைக்கழக 3 மண்டல வளாகங்களில் பி.இ. இளநிலைப் படிப்புகளை தொடங்க உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக நெல்லை, மதுரை, கோவை மண்டல வளாகங்களில் பொறியியல் இளநிலைப் படிப்புகளை தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை : மே-17

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 வளாகங்களிலும், சென்னை தவிர தமிழகம் முழுவதும் 13 உறுப்புக் கல்லூரிகளிலும் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நெல்லை, மதுரை, கோவை மண்டல வளாகங்களில் மட்டும் முதுநிலைப் படிப்பு மட்டுமே உள்ளதாகவும், இளநிலைப் படிப்புகளை தொடங்க கோரிக்கைகள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மண்டலத்திலும் 4 இளநிலைப் படிப்புகளை தலா 60 மாணவர்கள் சேர்க்கை வீதத்தில் தொடங்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் 3 மண்டலங்களிலும் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts