அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் படிப்பு

உயர் கல்வி பயிலும் மாணவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து படிக்க வேண்டும் என இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அறிவுறுத்தியது.

பொறியியல் மாணவர்களுக்கு கல்வித் திட்டம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். அதன்படி அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு புதிய கல்வித் திட்டத்தின்படி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், சுற்றுச்சூழல், மேலாண்மைத் தத்துவங்கள் ஆகியன பாடமாக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து இந்தாண்டு அண்ணா பல்கலைக் கழகம் வழி பொறியியல் பயிலும் மாணவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்தும் படிக்கவுள்ளனர்.

Related Posts