அதிகாரமற்ற வெற்று அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையம்: வைகோ குற்றச்சாட்டு

 

 

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம் இல்லாததால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசியல் சாசன அமர்வில் தமிழக அரசு முறையிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி வழக்கில் மத்திய அரசும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் மிகவும் தந்திரமாகவும், சூழ்ச்சியுடனும் தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார். அதிகாரம் ஏதுமற்ற வெற்று அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக புகார் கூறிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தின் உரிமையை காக்க உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பை எதிர்த்து, அரசியல் சாசன அமர்வில் தமிழக அரசு முறையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Posts