அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை ? உயர்நீதிமன்றம் கேள்வி

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக, வழக்கறிஞர் லட்சுமிநாராயணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன் கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பேனர்கள் வைப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? என கேட்ட நீதிபதிகள், சுபஸ்ரீ குடும்பத்திற்கு எவ்வளவு நஷ்டஈடு வழங்கப்போகிறீர்கள் என வினவினர். தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து வசூலித்து, சுபஸ்ரீ குடும்பத்திற்கு 5 லட்சம்  ரூபாய் இடைக்கால நிவாரண நிதியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி மற்றும் காவல்துறை  அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சுபஸ்ரீ மரணத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது பற்றி நாளை மறுதினம் தமிழக அரசு பதில் அளிக்க ஆணையிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Posts