அதிகாலை 1.55 மணியளவில் லேண்டர் விக்ரம் மெதுவாகத் தரை இறங்கும்

நிலவைச் சுற்றி வரும் லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2, புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. ஆறு நாள்கள் பயணத்துக்குப் பின்னர், விண்கலம் நிலவின் நீள் வட்டப் பாதைக்குள் நுழைந்தது. அதன் பின்னர் விண்கலம், நிலவுக்கு இடையேயான நீள்வட்டப் பாதையின் தொலைவை படிப்படியாக 5 முறை குறைத்து, நிலவுக்கு மிக அருகில் விண்கலத்தை வெற்றிகரமாக விஞ்ஞானிகள் கொண்டு சென்றனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஆர்பிட்டர் – லேண்டர் வெற்றிகரமாக பிரிபக்கப்பட்டது. இந்நிலையில், லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தின் லேண்டர், நிலவின் 109 கிலோ மீட்டர் அருகில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், நாளை 36 கிலோ மீட்டர் அருகில் கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணியளவில், அதை நிலவில் தரையிறங்கும் பணிகள் தொடங்கும். அப்போது, லேண்டரில் உள்ள லேசர் தொழில்நுட்பம் மூலம் நிலவில் தரையிறங்குவதற்கான சமதளப் பரப்பை தேர்வு செய்து, அடுத்த 15-ஆவது நிமிடத்தில் அதாவது அதிகாலை 1.55 மணியளவில் லேண்டர் விக்ரம் மெதுவாகத் தரை இறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Related Posts