அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளுக்கு தடை

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளுக்கு மட்டும் தடை விதிக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு நாடு முழுக்க பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க கோரி கொல்கத்தாவைச் சேர்ந்த தத்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். இதே போன்று பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு விசாரித்து வருகிறது.கடந்த 14-ஆம் தேதி அன்று நடைபெற்ற விசாரணையின் போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் ஆஜரான துருவ் மேத்தா, பட்டாசுகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டே தயாரிக்கப்படுகின்றன என்றார். ஆனால் பட்டாசுகளால் மட்டுமே மாசு பாடு ஏற்படுகிறது என்பதை நிரூபிக்க எந்த ஆய்வும் நடைபெறவில்லை என்றார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நாடு முழுக்க பட்டாசு வெடிக்க தடைவித்திக்க வேண்டாம் எனவும் அதிக அளவிலாக ஒலியுடன் வெடிக்கும் பட்டாசுகளுக்கு மட்டும் தடை விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts