அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

 

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் ஆதாரத்துடன் புகாரளித்தால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறையின் புதிய மாற்றங்களுக்காக சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கட்டண விவரத்தை வெளிப்படையாக தெரிவித்து அறிவிப்பு பலகைகள் வைக்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும்,  அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து ஆதாரத்துடன் புகாரளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார்.

Related Posts