அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்தியர் எனும் பெருமையை தோனி பெற்றுள்ளார்

Want create site? Find Free WordPress Themes and plugins.

மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்தியர் எனும் பெருமையை தோனி பெற்றுள்ளார்.

         14-வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் துபாய் மற்றும அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. அடுத்து 238 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 63 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  வெற்றி பெற்றது. தோனி  இந்த போட்டியில் விளையாடியதன் மூலம்,  504 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி,  அதிகளவிலான போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை  பெற்றுள்ளார்.  கடந்த 2004-ம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி இதுவரை 322 ஒரு நாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 93 டி20 போட்டிகள் என மொத்தம் 505 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 15 சதங்கள், 102 அரை சதங்கள் உள்பட 16 ஆயிரத்து 268ரன்களை குவித்துள்ளார்.  மேலும், 505 போட்டிகளில் 331 போட்டிகளுக்கு கேப்டனாக பதவியேற்று டி20 உலகக் கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் மூன்று விதமான கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் எனும் வரலாற்று சாதனையையும் அவர் தன் வசம் வைத்துள்ளார்.  இந்த பட்டியலில் 664 போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் பெயர் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts