அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்- கார் உற்பத்தியாளர்கள்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் கார் உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா : ஜூன்-28

இதுதொடர்பாக டோயட்டோ, வோக்ஸ்வேகன், பிஎம்டபிள்யு, ஹுண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கிய சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கூட்டமைப்பு, அமெரிக்க அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை அமெரிக்க ஆட்டோமொபைல் துறைக்கும், அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி வரி விதிக்கப்பட்டால் கார்கள் விலை அதிகரிப்பதுடன், விற்பனையும் சரிவடையும் என கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த துறையில் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts