அதிமுகவின் ஒரே அரசியல் எதிரி திமுக தான் என்றும், அது நேற்று, இன்று,  நாளையும் தொடரும்

அதிமுகவின் ஒரே அரசியல் எதிரி திமுக தான் என்றும், அது நேற்று, இன்று,  நாளையும் தொடரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-27

சென்னை பட்டினம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச்  சந்தித்த அவர்,  பொறுப்புள்ள  மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக – திமுக  கூட்டுவைத்து சட்டப்பேரவையில் செயல்படுவதாக கருத்துக் கூறியதற்கு கண்டனம் தெரிவித்தார்.  மேலும், அதிமுகவின்  ஒரே அரசியல் எதிரி திமுக தான் என்றும், அது நேற்று, இன்று, நாளையும் தொடரும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Related Posts