அதிமுகவின் வெற்றிக்கு அயராது பாடுபட தொண்டர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அழைப்பு 

இதுதொடர்பாக இருவரும் இணைந்து அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடித்த்தில், வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கனியை கொய்திட அதிமுக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தி.மு.க-வும், அ.ம.மு.க-வும், அதிமுக ஆட்சியைக் கலைப்போம் என்கிற ஒருமித்த குரலோடு நிற்பதாக அந்த கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையே மீண்டும் வாகை சூடியது என்கிற வரலாற்றைப் படைக்க, இடையறாது பணியாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிக் கோப்பைகளோடு, வருகிற 23ஆம் தேதி, உற்சாகம் துள்ளி வர காத்திருக்கும், அதிமுகவினரை வரவேற்க காத்திருப்பதாக, இருவரும் இணைந்து எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Posts