அதிமுகவிற்கு ஒரு வாக்களித்தாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம்: சந்திரபாபு நாயுடு

 சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்த அவர் பின்னர் செயதியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளதுஎனவும், அதிமுகவிற்கு ஒரு வாக்களித்தாலும்  அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம் எனவும் தெரிவித்தார்.  பிரதமர் மோடி நாட்டுக்கு துரோகம் செய்வதாக சாடிய சந்திரபாபு நாயுடு, டெல்லியில் விவசாயிகள் போராடியபோது பிரதமர் மோடி சந்தித்து பேசினாரா என வினவினார். அனைத்து விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறுவதை சுட்டிக்காட்டிய அவர், வளர்ந்த நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விலக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.  . தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முன்வரவில்லை என்வும்,  உலகில் 10 சதவீத நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு மத்திய அரசு பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது எனவும். மோடி அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு மாறிவிட்டதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் சந்திரபாபு நாயுடு புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts