அதிமுகவிற்கு தனி பெருமை உண்டு : அமைச்சர் ஜெயக்குமார்

இயற்கை பேரிடர்களை கையாள்வதில் அதிமுகவிற்கு தனி பெருமை உண்டு என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கதில் குடிநீர் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு சுமார் 2 கோடி ரூபாய் செலவில் பம்பிங் ஸ்டேசன் நிலையத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பம்பிங் ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இயற்கை பேரிடர்களை கையாள்வதில் அதிமுக விற்கு தனி பெருமை உண்டு என்று அவர் கூறினார்.

Related Posts