அதிமுகவுக்கு தேர்தல் பயம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிமுகவை விட்டு பிரிந்து, தனி அமைப்பை கண்டவர்கள் காணாமல் போனது தான் வரலாறு என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வுகூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 79 முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். அதிமுகவை விட்டு பிரிந்து, தனி அமைப்பை கண்டவர்கள் காணாமல் போனதும், பிரிந்து சென்றவர்கள் தானாக சேர்ந்ததும் தான் வராலாறு என தெரிவித்தார். மேலும், அதிமுகவுக்கு தேர்தல் பயம் இல்லை என கூறிய அமைச்சர், திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Related Posts