அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது; தமிழக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை பெற்றுத்தந்த்து மட்டுமல்லாமல் அரசிதழிலும் வெளியிட்டது மறைந்த முதலமைச்சர் ஜெயல்லிதா என்று தெரிவித்தார். இந்த ஆட்சியில் 6 லட்சம் பேருக்கு கான்கிரிட் வீடுகள் கட்டித் தரப்பட்டதாக தெரிவித்த அவர், ஒன்னரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று தெரிவித்தார்.

Related Posts