அதிமுகவை வீழ்த்த நினைத்தவர்கள் முன்னேற முடியாது : முதலமைச்சர்

அதிமுகவை வீழ்த்த நினைத்தவர்கள் கடுகளவுக் கூட முன்னேற முடியாமல் தவிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அமமுகவைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான  ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலருச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், முன்னாள் எம்.பி. மரகதகுமரவேல் உள்ளிட்டோர் அதிமுகவில் தங்களை மீண்டும் இணைத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்த எந்த கட்சியும் இல்லை என்றார்.

Related Posts