அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுத்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும்:  மு.க.ஸ்டாலின் 

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்றும் பிரபு ஆகிய மூவரும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களாக உள்ளனர். அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் தற்போது, அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். கருணாஸ் அவ்வப்போது அரசுக்கு ஆதரவாகவும் இருப்பதால், தமிமுன் அன்சாரி மீது மட்டும் நடவடிக்கை எடுக்க அரசு கொறடா ராஜேந்திரன் சட்டப்பேரவைத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி மற்றும் தமிமுன் அன்சாரி ஆகிய 4 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பேரவைத் தலைவர் தனபால் முடிவு செய்துள்ளார். 4 பேர் அளிக்கும் விளக்கத்தை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுத்த்தால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts