அதிமுக கூட்டணியின் வேகம் குறையவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

தேமுதிகாவுடனான பேச்சுவார்த்தை நீடிப்பதால் அதிமுக கூட்டணியின் வேகம் குறையவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநிலக் கல்லூரியில்,  2019-ஆம் ஆண்டு விழா மற்றும்  பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்தவிழாவில், கலந்து கொண்ட  அமைச்சர் ஜெயக்குமார்  பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக கூட்டணி எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகவும், தேமுதிக-வுடனான பேச்சுவார்த்தை நீடிப்பதால்  வேகம் குறையவில்லை எனவும் தெரிவித்தார்.  மேலும் திமுக- காங்கிரஸ் குறித்து அழகிரி  உண்மை பேசியுள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

Related Posts