அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில்.அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் சுமார் ஒரு கோடி மதிப்பிலான நாட்டு கோழி குஞ்சுகளை ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். கோழிக்குஞ்சுகளை பாதுகாப்பாக வளர்க்க 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் கூண்டுகள் வழங்கப்படுகிறது .நாட்டுக்கோழி குஞ்சுகளை பெறும் பயனாளிகளுக்கு ஒருநாள் கோழி வளர்ப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும் எனவும், அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

Related Posts