அதிமுக சார்பில் 4  தொகுதிகளில்  நாளை மறுநாள் விருப்பமனு தாக்கல்

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது எனவும்  இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வரும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.  விண்ணப்பப் படிவங்களை 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

Related Posts