அதிமுக தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது:ஓ. பன்னீர்செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் போட்டியிடும் மனோஜ் பாண்டியன் ஆதரித்து திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரிய இறுதி தீர்ப்பு அரசு இதழில் வெளிவந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றார் அவர். அதிமுக அரசு தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார்.

Related Posts