அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளது: ஓ. பன்னீர்செல்வம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி ஆட்சியில் மக்களுக்கு நலத் திட்டங்கள் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டதோ அவர்களுக்கு இந்த தேர்தலில் ஒரு எஜமானர்களாக, நீதிபதிகளாக இருந்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பதவி ஏற்றது முதல் தற்போது வரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தான் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts