அதிமுக மற்றும் டிடிவி தினகரன் கட்சியினருக்கிடையே கடும் மோதல்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கூட்டுறவு சங்கதேர்தல் மனு தாக்கலின் போது அதிமுக மற்றும் டிடிவி தினகரன் கட்சியினருக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

வள்ளியூரை அடுத்த ராதாபுரம் நான்குநேரியில் கூட்டுறவு சங்க தலைவர், துணைத்தலைவர், செயலாளர் மற்றும் 11 நிர்வாக உறுப்பினர்கள் பதவிக்கான  மனுதாக்கல் வள்ளியூர் கூட்டுறவு சங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மனுதாக்கலின் போது, அதிமுக கட்சியினருக்கும், அம்மா மக்கள் முன்னேற்றகழக கட்சியினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தள்ளு முள்ளு ஏற்பட்டதால், காவல்துறையினர் அவர்களை தடுத்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், காவல்துறையினரை அவதூறாக பேசியதோடு, தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்

Related Posts