அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை அக்டோபர் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

சுபஸ்ரீ பேனர் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை அக்டோபர் 11 ஆம் தேதி  வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையல் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரால் சுபஸ்ரீ என்ற பெண் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டையில் கைது செய்யப்பட்டார். அவர் இன்று காலை ஆலத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, அனுமதியின்றி பேனர் வைத்தது தவறு என்பதை ஜெயகோபால் நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அக்டோபர் 11 ஆம் தேதி வரை ஜெயகோபாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Related Posts