அதி.மு.க. கரைவேட்டியை அ.ம.மு.க.வினர் பயன்படுத்துவதற்கு  தடை செய்ய வேண்டும்  ஆணையத்திற்கு கோரிக்கை 

இது தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு ஒன்றை அளித்த அமைச்சர் சிவி சண்முகம் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஜெயலலிதா மறைந்த பிறகு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் இயங்கும் இயக்கம்தான் உண்மையான அ.தி.மு.க. என்றும், இரட்டை இலை சின்னமும் அவர்களுக்கே சொந்தம் என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாக சொல்லப்பட்டு இருப்பதாகவும் கூறினார். அதன்படி, ‘இனிமேல் அ.தி.மு.க.வுக்கோ, இரட்டை இலை சின்னத்துக்கோ சொந்தம் கொண்டாட மாட்டேன்’ என்று உச்சநீதிமன்றத்தில் உறுதி மொழி அளித்துள்ள டி.டி.வி.தினகரன் புதிய கட்சி தொடங்கி அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவும் விண்ணப்பித்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் இந்த உறுதிமொழிக்கு மாறாக அதிமுக கொடி மாதிரியையும், ஜெயலலிதா படத்தையும் அவர் பயன்படுத்தி வருகிறார் எனவும்,  குறிப்பாக அ.தி.மு.க.வின் கரைவேட்டியை அ.ம.மு.க.வினரும் பயன்படுத்துவதை கடுமையாக ஆட்சேபணை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள  டி.டி.வி.தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்,  அ.தி.மு.க.வின் கொள்கைகளை அப்படியே அ.ம.மு.க.வின் கொள்கைகளாக மாற்றியிருப்பதாக கூறுவது முற்றிலும் தவறு எனவும், அ.தி.மு.க. விதிமுறைகளில் கட்சியின் கரைவேட்டி பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.

, பாதி கருப்பும், பாதி சிவப்பும், நடுவில் கொடிக்கம்பத்தை நோக்கி அண்ணா ஒரு விரலை காட்டும் உருவத்தை வெள்ளை நிறத்தில் கொண்டதே அ.தி.மு.க.வின் கொடி என்று விதிமுறையில் கூறப்பட்டு உள்ளதாகவும்,

ஆனால் அ.ம.மு.க. கொடியில் ஜெயல்லிதா படத்துடன் 25 சதவீதம் கருப்பு, 25 சதவீதம் சிவப்பு, 50 சதவீதம் வெள்ளைநிறம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். .. எனவே, அ.ம.மு.க. கொடி முற்றிலும் அ.தி.மு.க. கொடியில் இருந்து வேறுபட்டது எனவும், அ.தி.மு.க.வின் புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் உரிய பதில் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts