அத்திவரதரை தரிசனம் செய்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது.

முதலில் சயன கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர்,பின் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினரோடு வி.ஐ.பி பகுதியில் தரிசனம் தந்தார்.

வி.ஐ.பி பகுதியில் நேற்று முன்தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்த நிலையில் நேற்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வந்து தரிசித்துள்ளார். நயன்தாராவை கண்ட சந்தோஷத்தில் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்

Related Posts