அத்திவரதரை தரிசிக்க உள்ளூர் மக்கள் கோவிலுக்கு வர வேண்டாம் : காவல்துறை வேண்டுகோள்

அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்க கட்டுக்கடங்காத கூட்டத்தில் மக்கள் காத்திருக்கும் நிலையில் நெரிசலை தவிர்க்க உள்ளூர் மக்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என காவல்துறையின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

37-வது நாளான இன்று அத்திவரதருக்கு நீலநிறப் பட்டாடையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை முதலே பக்தர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூர வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்துதரிசனம் செய்து வருகின்றனர்.அதிகாலை முதல் காலை பத்தரை மணி வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில்காத்திருக்கின்றனர்.இதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்க உள்ளூர் பக்தர்கள் தரிசனத்துக்கு வராமல் ஒத்துழைக்குமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.பக்தர்கள் கூட்டம்அதிகமானால் தரிசன நேரத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 5 நாட்களில் 12 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் 36 நாட்களில் சுமார் 57 லட்சத்து 50ஆயிரம் பக்தர்களும்அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

Related Posts