அத்திவரதர் உற்சவத்தையொட்டி உண்டியல் காணிக்கையாக 9 கோடியே 89 லட்சம் ரூபாய் வசூல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் உற்சவத்தையொட்டி உண்டியல் காணிக்கையாக 9 கோடியே 89 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 1ந்தேதி முதல் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31ந்தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் கடந்த 1ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். தரிசனம் நடைபெற்ற 47 நாட்களில் அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தநிலையில் அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வருமானம் 9 கோடியே 89 லட்சம் ரூபாய் என அறசிலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Posts