அத்திவரதர் தரிசனம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவு

அத்திவரதர் பெருவிழாவின் 47-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழாவின் 45 -ஆவது நாளான நேற்று பெருமாள் பழங்களால் செய்யப்பட்ட மலர்க்கிரீடமும், ரோஜா நிறப் பட்டாடை, ஊதா நிற அங்கவஸ்திரம் அணிந்து, புஷ்ப அங்கியால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
பெருமாளுக்கென்றே பிரத்யேகமாக செய்யப்பட்ட அத்திப்பழ மாலை, மகிழம்பூ மாலைகள் அணிந்திருந்தார்.

அத்திவரதரை நேற்று மட்டும் சுமார் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆடி மாத கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார். இன்று மாலை 5 மணியிலிருந்து அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8 மணிக்குப் பிறகு தரிசனம் தொடங்கும் என அவர் கூறினார்.

Related Posts