அத்திவரதர் தரிசனம் 17-ந் தேதி மதியம் 12 மணிக்கு நிறைவடைகிறது : ஆட்சியர்  பொன்னையா அறிவுப்பு

அத்திவரதர் தரிசனம் 17-ந் தேதி மதியம் 12 மணிக்கு நிறைவடையும் என்று மாவட்ட ஆட்சியர்  பொன்னையா தெரிவித்துள்ளார்.

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் தற்போது நின்றகோலத்தில் காட்சி தருகிறார். முதியோர், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் அத்திவரதரை தரிசித்தனர். அவர்களுக்கு வசதியாக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அத்திவரதர் தரிசனம் வரும் 17ம் தேதி மதியம் 12 மணியுடன் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts